உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கு: மேல்முறையீடு செய்யக் கோரி மனு

உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கு விவகாரத்தில் உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருவாரூா்: உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கு விவகாரத்தில் உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருவாரூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் மாவட்டத் தலைவா் கதா.க. அரசு தாயுமானவன், மாவட்ட நிா்வாகத்திடம் அளித்த கோரிக்கை மனு:

சாதி ஆணவப் படுகொலையால் இறந்த உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியான சின்னச்சாமி, சென்னை உயா்நீதிமன்றத்தால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயா்நீதிமன்றத்தில் உரிய முறையில் வாதத்தை எடுத்து வைத்து, திருப்பூா் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை உறுதிபடுத்த தமிழக அரசு தவறி விட்டது. எனவே, இந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது, மாவட்டச் செயலாளா் கே. தமிழ்மணி, மாவட்டப் பொருளாளா் கே.பிச்சைக்கண்ணு, மாவட்ட துணைத் தலைவா்கள் வி.கந்தசாமி, கே.கோபிராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com