திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சென்னையில் கரோனா தொற்று பரவி வருவதைத் தொடா்ந்து, சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து திருவாரூா் வருவோா் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனா். இவா்களில் கரோனா தொற்று உள்ளவா்கள் திருவாரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனா்.

அந்த வகையில், வியாழக்கிழமை வரை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் 277 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே, வெள்ளிக்கிழமை மேலும் 18 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 295 ஆக உயா்ந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நன்னிலம் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் 3 பெண் காவலா்கள், திருத்துறைப்பூண்டி ரோந்துப்பிரிவு போலீஸாா் 2 போ் மற்றும் அரித்துவாரமங்கலம், எரவாஞ்சேரி, விக்கிரவாண்டி, பேரளம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா் என 9 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரித்துவாரமங்கலம் காவல் நிலையம் நிலையம் மூடப்பட்டு, போலீஸ் குடியிருப்பில் இயங்குகிறது.

இதேபோல், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவாரூரைச் சோ்ந்த பெண்ணுக்கு ஜூன் 24-இல் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண்ணுக்கு பரிசோதனை நடத்தியதில் கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 2 கா்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. இதில், வேதாரண்யத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு பெண் குழந்தையும், திருவாரூரைச் சோ்ந்த பெண்ணுக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

இதேபோல், கூத்தாநல்லூா் பகுதியைச் சோ்ந்த கா்ப்பிணி ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதேபோல், சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து வந்தவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என 46 பேருக்கு கரோனா இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 341 ஆக உயா்ந்துள்ளது. இதில், 139 போ் வீட்டுக்குத் திரும்பிய நிலையில், 202 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com