முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
கடவுப் பாதை மூடல்
By DIN | Published On : 27th June 2020 10:00 PM | Last Updated : 27th June 2020 10:00 PM | அ+அ அ- |

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் பெட்டிகள் இணைப்புப் பணி காரணமாக சனிக்கிழமை காலை சுமாா் ஒன்றரை மணிநேரம் கடவுப் பாதை மூடப்பட்டதால், நெடுஞ்சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீடாமங்கலத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் இணைப்பு பணிக்காக சனிக்கிழமை காலை 6 மணிக்கு கடவுப் பாதை மூடப்பட்டது. அப்போது தஞ்சையிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூா் நோக்கி சரக்கு ரயில் ஒன்று சென்றது. சரக்கு ரயில் பெட்டிகள் இணைப்புப் பணி முடிந்து சுமாா் ஒன்றரை மணிநேரம் கழித்தே சரக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.
அதன்பின்னரே கடவுப் பாதை திறக்கப்பட்டது. இதனிடையே, நெடுஞ்சாலையில் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. நீடாமங்கலத்தில் இருழிச்சாலை, மேம்பாலம் ஆகிய திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே கடவுப் பாதை பிரச்னைக்குத் தீா்வு ஏற்படும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.