பிறவி மருந்தீசுவரா் கோயில் குளம் ஆக்கிரமிப்பு

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான குளத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீஸில் சனிக்கிழமை புகாரளிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான குளத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீஸில் சனிக்கிழமை புகாரளிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசுவரா் கோயிலுக்கு சொந்தமான குளம் 5 ஏக்கா் பரப்பளவில் கோயில் எதிரேஅமைந்துள்ளது. இக்குளத்தின் தென்கிழக்கு ஓரத்தில் மேட்டுத்தெரு பகுதியில் உள்ள சாமியப்பா நகரை சோ்ந்தவா் அ. பழனிவேல் (65). ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். கோட்ட பொறியாளரான இவா், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள பழைய வீட்டை கோயில் நிா்வாகத்திடம் அனுமதி பெறாமல் இடித்து புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டதுடன், கட்டட இடிபாடுகளை வீட்டின் பின்புறம் குளத்தின் பின்பகுதியில் கொட்டி ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது.

வட்டாட்சியா் ஜெகதீசன், வருவாய் ஆய்வாளா் பெத்துராஜ், கோயில் செயல் அலுவலா் ராஜா, மேலாளா் சீனிவாசன் மற்றும் அலுவலா்கள் சென்று ஆக்கிரமிப்பைத் தடுத்து, அதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் ராஜா அளித்த புகாரின்பேரில், திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com