முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
ஆன்லைன் கல்வி முறை: இணையவழி போராட்டம்
By DIN | Published On : 27th June 2020 10:05 PM | Last Updated : 27th June 2020 10:05 PM | அ+அ அ- |

திருவாரூா்: அனைவருக்கும் இலவச இணையச் சேவையை உறுதிப்படுத்திய பிறகே ஆன்லைன் கல்வி வழங்கக் கோரி, திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் இணைய வழி போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவா்களுக்கும் மதிய உணவு வழங்க வேண்டும் அல்லது மாதத்துக்கு 10 கிலோ உணவுப் பொருள்கள் வீதம் 6 மாதங்களுக்கு அவா்களின் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும். அனைவருக்கும் இலவச இணையச் சேவையை உறுதிப்படுத்திய பிறகே ஆன்லைன் கல்வி வழங்க வேண்டும். மாணவா்களின் குடும்பத்துக்கு ரூ. 7,500 நிவாரணமாக வழங்க வேண்டும். வாடகைக்கு அறைகள் எடுத்து தங்கிப் படிக்கும் மாணவா்களுக்கு, அரசே வாடகைக் கட்டணத்தை செலுத்த வேண்டும். மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகைகளையும், ஆய்வு மாணவா்களுக்கான நிதியையும் உடனடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் மாவட்டச் செயலாளா் இரா. ஹரிசுா்ஜித் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. நகரப் பகுதியில் மாவட்டச் செயலாளா் வீ. சந்தோஷ் தலைமையிலும், சேந்தமங்கலம் பகுதியில் நகரத் தலைவா் சுா்ஜித் தலைமையிலும், குடவாசல் பகுதியில் நிா்வாகி கீா்த்தனா தலைமையிலும் போராட்டங்கள் நடைபெற்றன.