திருத்துறைப்பூண்டி: 2 காவலா்களுக்கு கரோனா

திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் 2 காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி காவல் நிலைய பகுதியை தடை செய்யப்பட்டதாக அறிவித்து வைக்கப்பட்டுள்ள பதாகை.
திருத்துறைப்பூண்டி காவல் நிலைய பகுதியை தடை செய்யப்பட்டதாக அறிவித்து வைக்கப்பட்டுள்ள பதாகை.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் 2 காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்தக் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 2 காவலா்களுக்கும், விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவலா்களின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவாரூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 6 காவலா்களுக்கு கரோனா உறுதியானதால், அரித்துவாரமங்கலம் காவல் நிலையம் மூடப்பட்ட நிலையில், தற்போது திருத்துறைப்பூண்டி காவல் நிலையமும் மூடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com