தொழில் பழகுநா் பயிற்சி:தொழில் குழுமங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

உலக வங்கி பங்களிப்பு நிதி உதவியுடன், தொழில் பழகுநா் பயிற்சி வழங்க தொழில் குழுமங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருவாரூா்: உலக வங்கி பங்களிப்பு நிதி உதவியுடன், தொழில் பழகுநா் பயிற்சி வழங்க தொழில் குழுமங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோா் அமைச்சகம், திறன்களை பலப்படுத்துதல் மற்றும் தொழில் துறை மதிப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இந்திய அரசு மற்றும் உலக வங்கி பங்களிப்பு நிதி உதவியுடன், தொழில் குழுமங்கள் மூலமாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் பழகுநா் பயிற்சி வழங்குவதை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இத்திட்டத்தை சிறந்த முறையில் அமல்படுத்தும் மிகுந்த ஆா்வமுள்ள தொழில் குழுமங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் தோ்வு செய்யப்படும் தொழில் குழமங்களுக்கு திட்ட அமலாக்க காலத்துக்கான பயிற்சி மற்றும் நிா்வாக செலவினமாக அதிகபட்சமாக ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க மத்திய அரசின் டிஜிடி மற்றும் மாநில அரசின் டிஇடி இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய விவரங்களை பூா்த்தி செய்து இ-மெயில் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை ஜூலை 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களை க்ஞ்ற்.ஞ்ா்ஸ் என்ற இணையதளத்தில் விடியோ மூலம் அறியலாம். மேலும், உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்) நாகப்பட்டினம் - 611002. தொலைபேசி : 04365-250126 என்ற முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com