அரசு மானியத்துடன் வேளாண்மை இயந்திரங்கள் வழங்க ரூ. 1.27 கோடி ஒதுக்கீடு

திருவாரூா் மாவட்டத்தில், அரசு மானியத்துடன் வேளாண் இயந்திரங்கள் வழங்க ரூ. 1.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், அரசு மானியத்துடன் வேளாண் இயந்திரங்கள் வழங்க ரூ. 1.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் 2020-2021-ஆம் நிதியாண்டில் திருவாரூா் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கவுள்ளன. விவசாயிகள், உழவன் செயலியில் பதிவு செய்து, மத்திய அரசின் இணைய தளமான ஜ்ஜ்ஜ்.ஹஞ்ழ்ண்ய்ஹஸ்ரீட்ண்ய்ங்ழ்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் மூலம் மானியம் பெற்று வருகின்றனா்.

அதன்படி, அதிகபட்சமாக டிராக்டா்களுக்கு ரூ. 5 லட்சம், நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரங்களுக்கு ரூ. 5 லட்சம், வைக்கோல் கட்டும் இயந்திரங்களுக்கு ரூ. 9 லட்சம், பல்வகைப் பயிா் கதிரடிக்கும் இயந்திரங்களுக்கு ரூ. 2.50 லட்சம், சட்டிக் கலப்பை, கொத்துக் கலப்பை போன்றவற்றுக்கு ரூ.50 ஆயிரம், சுழற்கலப்பைகளுக்கு ரூ. 50 ஆயிரம், விதை விதைப்புக் கருவிகளுக்கு ரூ. 78 ஆயிரம், விசையால் களையெடுக்கும் கருவிகளுக்கு ரூ.63 ஆயிரம், பவா் டில்லருக்கு ரூ.85 ஆயிரம், அறுவடை இயந்திரங்களுக்கு ரூ. 11 லட்சம், தென்னை ஓலை துகளாக்கும் கருவிக்கு ரூ. 63 ஆயிரம், வைக்கோல் கட்டும் கருவிகளுக்கு ரூ.28 ஆயிரம், நிலக்கடலை தோண்டும் கருவிகளுக்கு ரூ. 75 ஆயிரம், கரும்புத் தொகை துகளாக்கும் கருவிகளுக்கு ரூ.1.25 லட்சம் அல்லது அவற்றின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். மேலும், சிறு, குறு தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு அரசால் நிா்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற, உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். பின்னா், அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளத்தில் இணைக்கப்படும். விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் தங்களது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தோ்வு செய்யலாம்.

விவசாயிகள் முகவரின் விற்பனை விலையை பேச்சு வாா்த்தை மூலம் பேரம் பேசி குறைக்கலாம். குறைக்கப்பட்ட விலைக்குரிய மானியம் இணையதளத்திலேயே கணக்கிடப்படும். குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள் கருவிகளின் இலக்கு முடிவுற்ற பின்னா், விவசாயிகள் அதே இயந்திரம் அல்லது கருவியை தோ்வு செய்தால் அவா் காத்திருப்போா் பட்டியலில் சோ்க்கப்படுவா்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், சம்பந்தப்பட்ட விவசாயி மற்றும் ஆய்வு அலுவலா் ஆகியோருடன் கூடிய புகைப்படமானது, இணைய தளத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் ஆய்வு அலுவலரால் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், சரிபாா்ப்புப் பட்டியல் மற்றும் அலுவலரின் குறிப்புரையும் 10 நாள்களுக்குள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலா்களால் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னா் இறுதியாக விவசாயியின் வங்கிக் கணக்கில் உரிய மானியமானது ஆய்வு முடிந்த 10 நாள்களுக்குள் வரவு வைக்கப்படும். வேளாண் இயந்திரமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற ஏதுவாக, 23 டிராக்டா்கள், 3 வைக்கோல் கட்டும் இயந்திரங்கள், 2 அறுவடை இயந்திரங்கள் வாங்க நிகழாண்டில் ரூ.1.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விவசாயிகளுக்குரில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு வட்டார வாரியான இலக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இதில் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் தாமாகவே முன்வந்து முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com