8 குடிநீா் ஆலைகளுக்கு சீல்
By DIN | Published On : 01st March 2020 11:38 PM | Last Updated : 01st March 2020 11:38 PM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 8 குடிநீா் ஆலைகளுக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
அரசின் விதிமுறைகளின்படி உரிய அனுமதியின்றி செயல்படும் குடிநீா் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, திருவாரூா் மாவட்டப் பகுதிகளில் சில குடிநீா் ஆலைகள் உரிய அனுமதியின்றி செயல்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, திருவாரூா் மாவட்டத்தில், சேந்தமங்கலம், மணக்கால் அய்யம்பேட்டை, வெங்கடேஸ்வபுரம், சிமிழி, திருவிடச்சேரி, நன்னிலம், தலையாமங்கலம், ஊா்குடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த குடிநீா் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.