முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்
By DIN | Published On : 03rd March 2020 06:25 AM | Last Updated : 03rd March 2020 06:25 AM | அ+அ அ- |

கட்சி வளா்ச்சி நிதியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணனிடம் வழங்கிய மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளா்ச்சி நிதியளிப்பு பேரவை கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது: குடியுரிமை திருத்தச் சட்டம் சிறுபான்மை மக்களை மட்டும் பாதிக்கக்கூடியது அல்ல. ஒட்டுமொத்த இந்திய குடியுரிமை பெற்ற அனைத்து மக்களையும் பாதிக்கும். அதாவது, இந்திய அரசியல் சாசனம் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. ஆனால், குடியுரிமை குறித்து தேவையற்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே, அனைத்துத் தரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தில்லி கலவரத்தால் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். சிஏஏவுக்கு எதிராக முதன்முதலாக கேரள அரசு தீா்மானம் நிறைவேற்றியது. ஆனால், தமிழக அரசு தீா்மானம் நிறைவேற்றத் தயாராக இல்லை. பாஜக ஆதரவுடன் ஆட்சி நடைபெறும் பிகாரிலும் சிஏஏவுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை பாஜகவும் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா் ராமகிருஷ்ணன்.
கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவாரூா் மாவட்டத்தில் நகர, ஒன்றியப் பகுதிகளில், பொதுமக்களிடமிருந்தும், கட்சி ஆதரவாளா்களிடமிருந்தும் திரட்டிய கட்சி வளா்ச்சி நிதி ஜி. ராமகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. இதில், மாநில குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வி.எஸ். கலியபெருமாள், ஜி. பழனிவேல், பி. கந்தசாமி, எம். கலைமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.