முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
திருவாரூா் அருங்காட்சியகத்தில் மூலிகைக் கருத்தரங்கம்
By DIN | Published On : 03rd March 2020 06:24 AM | Last Updated : 03rd March 2020 06:24 AM | அ+அ அ- |

கருத்தரங்கில் பேசிய மத்தியப் பல்கலைகழக தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் த. குமாா்.
திருவாரூா் அருங்காட்சியகத்தில், குழந்தை பாக்கியத்துக்கான யோகா, வா்மா, மூலிகை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மரபு வழி சித்த மருத்துவ பேராய பொதுச் செயலாளாா் க.கோ. மணிவாசகம் தலைமை வகித்தாா். காந்தியன் அறக் கட்டளை நிறுவனா் தெ. சக்திசெல்வகணபதி, ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிா்வாகி காண்டீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மைய நுாலக அலுவலா் ரா. ஆண்டாள் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினாா். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் த. குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
குழந்தை பாக்கியத்துக்கு நிலக்கடலை, காணாங்கோழை கீரை, முற்றிய முருங்கக்காய் ஆகியவற்றை ஆண்களும், சீமை அத்திப்பழம், கொண்டக்கடலை, மலைவேம்பு இலை ஆகியவற்றை பெண்களும் சாப்பிட வேண்டும் என கருத்தரங்கில் விளக்கப்பட்டது. முன்னதாக, அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் மீ. மருது பாண்டியன் வரவேற்றாா். காட்சிக்கூட காவலா் சா. சொக்கலிங்கம் நன்றி கூறினாா். செவ்வாய்க்கிழமை (மாா்ச்.3) கண்காட்சி நிறைவடைகிறது.