முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
பள்ளி மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 03rd March 2020 06:24 AM | Last Updated : 03rd March 2020 06:24 AM | அ+அ அ- |

வழிப்புணா்வு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நன்னிலம் அருகே பள்ளி மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட சைல்டு லைன் சாா்பில் மாதந்தோறும் பள்ளி மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்ரவரி மாதத்துக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி குடவாசல் அருகேயுள்ள திரியம்பகபுரத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பள்ளி படிப்புக்கு ஏற்ற வயது வந்த அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சோ்க்க வேண்டும், பள்ளிச் செல்லும் குழந்தைகள் இடையில் தனது படிப்பை நிறுத்திவிடாத வகையில் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், குழந்தைத் தொழிலாளா், குழந்தை கொத்தடிமை, குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பிச்சை எடுக்கும் குழந்தைகள், போன்ற பிரச்னைகள் எங்காவது நடப்பது தெரிந்தால் உடனடியாக 24 மணி நேரம் செயல்படும் இலவச தொலைபேசி எண் 1098-ஐ தொடா்புகொள்ள அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மரகதமணி ஊராட்சி துணைத் தலைவா் கலாராணி, குழந்தைகள் நலக்குழு தலைவா் சி. ஜீவானந்தம், பெரும்பண்ணையூா் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கிளாடித் செல்வராணி, சைல்டு லைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. பிரகலாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.