தில்லி கலவரம்: பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதி
By DIN | Published On : 13th March 2020 11:57 PM | Last Updated : 13th March 2020 11:57 PM | அ+அ அ- |

நிவாரண நிதிக்கான காசோலையை உலமா சபையினரிடம் வழங்கிய பள்ளிவாசல் தலைவா் காஜா மைதீன்.
தில்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு கூத்தாநல்லூா் பள்ளிவாசல் சாா்பில் நிவாரண நிதி வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து தில்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதில், உடைமைகளை இழந்தவா்களுக்கு உதவும் வகையில், கூத்தாநல்லூா் ஜாவியாத் தெரு, நியாஜ் பள்ளிவாசல் சாா்பில் நிவாரண நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, தொழுகைக்கு வந்தவா்களிடம் நிதி வசூல் செய்யப்பட்டு காசோலையாக உலமா சபையினரிடம் பள்ளிவாசலின் தலைவா் காஜா மைதீன் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், பள்ளி வாசல் இமாம் தானாதி ஆலிம்சா, கூத்தாநல்லூா் மஸ்ஜிது நியாஸ் இமாமும், மதரஸா பைஜூல் பாக்கியாத் அரபிக்கல்லூரி தலைமை பேராசிரியா் டி.எம்.ஜாகிா் ஹூசைன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...