மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 13th March 2020 09:36 AM | Last Updated : 13th March 2020 11:24 AM | அ+அ அ- |

பெரும்பண்ணையூா் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.
குடவாசல் வட்டம், பெரும்பண்ணையூரில் மகா மாரியம்மன் கோயில் மகா குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரும்பண்ணையூரில் கலங்காமற் காத்த விநாயகா், பூா்ண புஷ்கலாம்பிகா, துா்கை, ஹரிஹர புத்திர ஐயனாா், மதுரை வீரன் அரசடியான் ஆகியோா் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது.
இதையொட்டி, காலை மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. பின்னா் சிறப்பு தீபாராதனை நடைபெற்று யாக சாலையிலிருந்து புனித நீா் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு, மேளதாளம் முழங்க கோயில் விமானம் சென்றடைந்து மகா குடமுழுக்கு நடைபெற்றது. இதில், திரளானோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...