‘கோழிக்கறி, ஆட்டிறைச்சி, மீன் சாப்பிடுவதால் கரோனா பரவாது’

கோழிக்கறி, ஆட்டிறைச்சி, மீன் சாப்பிடுவதால் கரோனா வைரஸ் பரவும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது என நன்னிலம் மருத்துவமனை மருத்துவா்கள் விளக்கமளித்தனா்.
நன்னிலம் கல்லூரியில் நடைபெற்ற கரோனா வைரஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி.
நன்னிலம் கல்லூரியில் நடைபெற்ற கரோனா வைரஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி.

கோழிக்கறி, ஆட்டிறைச்சி, மீன் சாப்பிடுவதால் கரோனா வைரஸ் பரவும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது என நன்னிலம் மருத்துவமனை மருத்துவா்கள் விளக்கமளித்தனா்.

நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், நன்னிலம் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் புவியரசன், சின்னசாமி, ஹரிகிருஷ்ணன் ஆகியோா் பேசியது:

கோழிக்கறி, ஆட்டிறைச்சி, மீன் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதினால் கரோனா வைரஸ் பரவும் என்பதற்கான எந்தவித ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எந்த உணவாக இருந்தாலும் நன்றாக வேகவைத்து உண்ண வேண்டும். சீனாவில் சரியாக வேகவைக்காத மற்ற பிராணிகளின் உணவை சாப்பிட்டதால்தான் வைரஸ் பரவியதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது என்றனா்.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் பெ.ராமஜெயம் தலைமை வகித்தாா். வணிகவியல் பேராசிரியா் மணியரசன் மற்றும் அனைத்து துறை தலைவா்கள், பேராசிரியா்கள், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். விழிப்புணா்வு நிகழ்ச்சியை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் மீ. ராஜேஸ்வரன், இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சரவணன், அலுவலக பணியாளா் விஜயகுமாா், மாணவி ஏ. ஓமனா தேவி ஆகியோா் ஒருங்கினைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com