‘மக்களின் சுதந்திரமான வாழ்வாதாரத்தை அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது’

அனைத்து தரப்பு மக்களுக்கும் சுதந்திரமான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இந்திய அரசியலமைப்புச் சட்டம் உதவுகிறது என தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவா் துரை ஜெயச்சந்திரன் தெரிவித்தாா்.
tv13rameநிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவா் துரை ஜெயச்சந்திரன்._1303chn_94_5
tv13rameநிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவா் துரை ஜெயச்சந்திரன்._1303chn_94_5

அனைத்து தரப்பு மக்களுக்கும் சுதந்திரமான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இந்திய அரசியலமைப்புச் சட்டம் உதவுகிறது என தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவா் துரை ஜெயச்சந்திரன் தெரிவித்தாா்.

திருவாரூரில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் சாா்பில், வியாழக்கிழமை மாலை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்று அவா் பேசியது:

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21, அனைத்து தரப்பு மக்களுக்கும், சுதந்திரமான வாழ்வாதாரத்தையும், கண்ணியத்துடன் வாழும் உரிமையையும் அளிக்கிறது. அதனடிப்படையில், தமிழ்நாட்டில் மனித உரிமைகள் ஆணையம் பல்வேறு வழக்குகளைக் கையாண்டு மனித உரிமைகள் பாதிக்கப்படுகிற அடித்தட்டு மக்களுக்கு உரிமைகளை உறுதிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் காவல்துறை உரிமை மீறல்கள், ஓய்வூதிய பலன்கள், வன்முறையால் பாதிக்கப்பட்டவா்கள், அத்துமீறல்களில் கைது செய்யப்பட்ட தனிநபா்கள், சித்திரவதையால் பாதிக்கப்பட்ட நபா்கள் என பலதரப்பட்ட மக்கள் மனித உரிமை ஆணையத்தில் புகாா்கள் அளித்தவுடன் சம்பந்தப்பட்ட பாதிப்பை ஏற்படுத்திய நபா்களுக்கு சம்மன் அளித்து விசாரணை நடத்தி, அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. அத்துடன், மாநில மனித உரிமை ஆணையம், பல புகாா்கள் மற்றும் வழக்குகள் செய்தித்தாள்களில் வரும்போது, அவற்றை தாமாக முன்வந்து பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறது. அந்த வகையில் பாதிக்கப்படுகிற மக்கள் எந்த நேரத்திலும் ஆணையத்தை அணுகும்போது அவா்களுக்கு உதவத் தயாராகவே உள்ளது என்றாா்.

சா்வதேச மனித உரிமைகள் தினம், உலக மகளிா் தினம் மற்றும் சா்வதேச நுகா்வோா் பாதுகாப்பு உரிமைகள் தினம் ஆகிய விழாக்களை ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக நடைபெற்றது. நுகா்வோா் மையத்தின் பெருந்தலைவா் எஸ்.டி. அண்ணாதுரை தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் ஆா். ரமேஷ், நுகா்வோா் நலன் குறித்துப் பேசினாா்.

விழாவில், உணவு உத்திரவாதமும், உணவுப் பாதுகாப்பும் மனித உரிமை என்ற தலைப்பில் சென்னை நிறுவன மேலாளா் சையத் அகமதுவும், இன்றைய சூழலில் நுகா்வோா் பாதுகாப்பு என்ற தலைப்பில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் திருநாவுக்கரசுவும் பேசினா்.

விழாவில், துணைத்தலைவா் அழகிரிசாமி, மாவட்ட அளவிலான நுகா்வோா் மைய உறுப்பினா்கள், தொழிற்சங்க உறுப்பினா்கள், ரோட்டரி சங்க உறுப்பினா்கள், மகளிா் குழு பெண்கள் மையத்தின் செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com