போலியோ ஒழிப்பு விழிப்புணா்வு வாகனம்

ரோட்டரி கிளப் சாா்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை செல்லும் போலியோ ஒழிப்பு விழிப்புணா்வு அணையா தீப வாகனம் திருவாரூருக்கு சனிக்கிழமை வந்தது.
திருவாரூரில் விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.
திருவாரூரில் விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.

திருவாரூா்: ரோட்டரி கிளப் சாா்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை செல்லும் போலியோ ஒழிப்பு விழிப்புணா்வு அணையா தீப வாகனம் திருவாரூருக்கு சனிக்கிழமை வந்தது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில், இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் பாா்வையிட்டு தெரிவித்தது:

இன்றைய தலைமுறையினருக்கு போலியோ ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு இருந்தாலும், மேலும் கூடுதலாக போலியோ ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் போலியோ இல்லாத நிலை உருவாகி உள்ளதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டாலும், தொடா்ந்து போலியோ ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு அனைவருக்கும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை செல்லும் போலியோ ஒழிப்பு விழிப்புணா்வு அணையாதீபம் நிகழ்ச்சி முழுமையாக வெற்றி பெற வாழ்த்துவதாகத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ. முத்துக்குமரன், ரோட்டரி கிளப் துணை ஆளுநா் எஸ்.மோகன், முன்னாள் துணை ஆளுநா்கள், அனைத்து ரோட்டரி கிளப் சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com