கரோனா அச்சம்: வலங்கைமான் மாரியம்மன்கோயில் பாடைக்காவடி திருவிழா ஒத்திவைப்பு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரசித்தி பெற்ற வலங்கைமான் மாரியம்மன் கோயில் பாடைக் காவடி திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரசித்தி பெற்ற வலங்கைமான் மாரியம்மன் கோயில் பாடைக் காவடி திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் க. சிவகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் திருவிழா தினசரி நிகழ்ச்சிகள், பாடைக்காவடி திருவிழா மற்றும் புஷ்ப பல்லக்கு விழா ஆகியன தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன. தற்போது மத்திய அரசால், தேசியப் பேரிடா் என அறிவிக்கப்பட்டு, அது தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளின் தொடா் நடவடிக்கைக்காகவும், பக்தா்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், கோயில் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன. திருவிழா தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com