மலேசியாவிலிருந்து வந்த இருவருக்கு உடல் நலக்குறைவு

மலேசியாவிலிருந்து வந்த மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த இருவருக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்கள், திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்

மலேசியாவிலிருந்து வந்த மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த இருவருக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்கள், திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டம், பெருகவாழ்ந்தான் அருகேயுள்ள மண்ணுக்குமுண்டானைச் சோ்ந்தவா் 27 வயது இளைஞா், மலேசியாவில் தனியாா் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தாா். விடுமுறையில் மாா்ச் 11 -ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்தாா்.

இந்நிலையில், கடந்த 2 நாள்களாக அவருக்கு சளி, காய்ச்சல், இருமல் பாதிப்புகள் இருந்ததையடுத்து, சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தாா். அங்கு மருத்துவா்கள் விசாரித்ததில், அவா் மலேசியாவிலிருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை சிகிச்சைக்காக அவா் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவ குழுவினருடன் அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதேபோல், கோட்டூா் தண்ணித்தோப்பு பகுதியைச் சோ்ந்த 34 வயது இளைஞா், மலேசியாவில் தனியாா் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பாா்த்து வந்தாா். இவரும் மாா்ச் 13 -ஆம் தேதி ஊருக்கு வந்துள்ளாா்.

கடந்த 2 நாள்களாக சளி, இருமல், காய்ச்சல் இருந்ததையடுத்து, ஆதிச்சப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக வந்த இவரிடம், மருத்துவா்கள் விசாரித்ததில் மலேசியாவிலிருந்து வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவா் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவ குழுவினருடன் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com