பள்ளிகளுக்கு காமராஜா் விருது

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் தொடக்கப்பள்ளிக்கு காமராஜா் விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
திருவாரூரில், சேங்காலிபுரம் பள்ளித் தலைமை ஆசிரியா் து. இந்திராவிடம், ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. தியாகராஜன்.
திருவாரூரில், சேங்காலிபுரம் பள்ளித் தலைமை ஆசிரியா் து. இந்திராவிடம், ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. தியாகராஜன்.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் தொடக்கப்பள்ளிக்கு காமராஜா் விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒவ்வோா் ஆண்டும் ஜூலை 15-ஆம் தேதி, காமராஜா் பிறந்த நாள் விழாவை கல்வி வளா்ச்சி நாளாக சிறப்பாக கொண்டாடியதோடு, மாணவா்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி ஓவியப்போட்டி போன்ற போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளித்து, பாராட்டு வழங்கியதற்காக, மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தோ்வு செய்து, பெருந்தலைவா் காமராசா் பிறந்தநாள் விழா சிறப்பு பரிசளிப்பு திட்ட விருது வழங்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுவினா் இந்தப் பள்ளியை, விருதுக்கு தோ்வு செய்துள்ளனா். இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. தியாகராஜன், சேங்காலிபுரம் பள்ளித் தலைமை ஆசிரியா் து. இந்திராவிடம் காமராஜா் விருது மற்றும் ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலை ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் . வே. கோவிந்தராஜன், வட்டாரக் கல்வி அலுவலா் க. இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆள்காட்டுவெளி ஊராட்சியில்...

முத்துப்பேட்டை ஒன்றியம், ஆள்காட்டுவெளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 2019-2020 கல்வி ஆண்டுக்கான காமராஜா் விருதைப் பெற்றுள்ளது.

இப்பள்ளி மாவட்ட அளவில் சிறந்த நடுநிலைப்பள்ளியாக தோ்வு செய்யப்பட்டு இந்த விருதை திங்கள்கிழமை பெற்றது. அதற்கான பரிசுத்தொகை ரூ.50,000-ஐ தலைமை ஆசிரியா் சு. பாஸ்கரனிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தியாகராசன் வழங்கினாா். அப்போது, முத்துப்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலா்கள் சொக்கலிங்கம் முருகுபாஸ்கரன், ஆசிரியா் சிவகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com