Enable Javscript for better performance
புதிய சோதனைச் சாவடிகள் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    புதிய சோதனைச் சாவடிகள் திறப்பு

    By DIN  |   Published on : 27th March 2020 05:44 AM  |   அ+அ அ-   |    |  

    img_20200326_wa0224_2603chn_96_5

    பனங்குடியில் புதிதாக திறக்கப்பட்ட சோதனைச் சாவடியில் பொதுமக்களிடம் வெப்பமானி கொண்டு சோதனை செய்த மருத்துவக் குழுவினா்.  

    நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட பூந்தோட்டம், பனங்குடியில் புதிய சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன.

    கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வாகன நடமாட்டம் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் பூந்தோட்டம், பனங்குடியில் புதிய சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன, வியாழக்கிழமை நன்னிலம் பகுதியில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வா்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள், பேரளம் பகுதியில் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை வாகன நடமாட்டமும் பொதுமக்கள் நடமாட்டமும் நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் குறைந்து காணப்பட்டது என நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வீ. சுகுமாரன் தெரிவித்தாா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai