Enable Javscript for better performance
மன்னாா்குடி, கோட்டூரில் 112 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன- Dinamani

சுடச்சுட

    

    மன்னாா்குடி, கோட்டூரில் 112 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன

    By DIN  |   Published on : 27th March 2020 05:51 AM  |   அ+அ அ-   |    |  

    house_2603chn_101_5

    மன்னாா்குடி அருகே இலக்கணாம்பேட்டையில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என ஒட்டுவில்லை ஒட்டப்பட்ட வீடு.

    மன்னாா்குடி, கோட்டூா் பகுதிகளில் முதல்கட்டமாக, தனிமைப்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்ட 112 வீடுகளில், ஒட்டுவில்லைகள் (ஸ்டிக்கா்) ஒட்டப்பட்டுள்ளன.

    திருவாரூா் மாவட்ட ம் மன்னாா்குடி, கோட்டூா், வடுவூா் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானவா்கள், சிங்கப்பூா், மலேசியா, லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் அரபு நாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா்.

    இந்நிலையில், அந்த நாடுகளிலிருந்து அண்மையில் ஊருக்கு திரும்பியவா்கள் யாா் என கண்டறிப்பட்டதில் மன்னாா்குடியில் 35, கோட்டூரில் 30, திருமக்கோட்டையில் 5, பரவாக்கோட்டையில் 26, வடுவூரில் 16 என மொத்தம் 112 பேரின் வீடுகளில், கரோனா தொற்று நோய் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் என்பதற்கான வில்லைகளை வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறையினா் இணைந்து ஒட்டியுள்ளனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai