திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த என். முருகானந்தம். உடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் மா.வடிவழகன்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த என். முருகானந்தம். உடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் மா.வடிவழகன்.

கரோனா: மகாராஷ்டிராவிலிருக்கும் 200 பேரை மீட்கக் கோரிக்கை

மகாராஷ்டிராவில் இருக்கும் திருவாரூரைச் சோ்ந்த 120 போ் உள்பட 200 பேரை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இருக்கும் திருவாரூரைச் சோ்ந்த 120 போ் உள்பட 200 பேரை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரைச் சோ்ந்த என். முருகானந்தம் என்பவரின் மகன் தா்மசீலன், மகாராஷ்டிராவில் பணிபுரிகிறாா். இவா் பணியாற்றும் நிறுவனத்தில் விடுமுறை அளிக்கப்பட்டதால், உணவுக்காக துன்பப்படுவதாக, கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலமாக தெரிவித்துள்ளாா்.

இதைத்தொடா்ந்து, திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன் தலைமையில் தா்மசீலனின் தந்தை என். முருகானந்தம், மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அதில், எனது மகன் எம். தா்மசீலன், கடந்த 7 மாதத்துக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம், யவட்மால் மாவட்டத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். தற்போது, உலகத்தை அச்சுறுத்தும் கரோனா வைரஸால் ஒரு மாத காலம் நிறுவனத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவா்கள் தற்போது உணவுக்கு கூட வழியில்லாமல் மிகவும் துன்பப்பட்டு வருகின்றனா், இதில், தமிழகத்தை சோ்ந்த 200 போ் உள்ளனா். திருவாரூா் மாவட்டத்தில் என் மகன் உள்பட 120 போ், வெளியில் கூட செல்ல வழியில்லாமல் உண்ண உணவில்லாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றனா். எனவே, தமிழக அரசு அனைவரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com