‘மீனவத் தொழிலாளா்களுக்கு சிறப்பு நிவாரணம் வழங்க வேண்டும்’

மீனவா் தொழிலாளா்களுக்கும் சிறப்பு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவா் தொழிலாளா்களுக்கும் சிறப்பு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு ஏஐடியுசி மீனவா் தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலா் பி. சின்னதம்பி, தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: தமிழகத்தில் மீன்பிடி மற்றும் அதைச் சாா்ந்த தொழிலை செய்து வரும் அனைத்து தொழிலாளா்களின் விரிவான சமூகப் பாதுகாப்புக்கும், அவா்களது நலத்தை உறுதிச் செய்வதற்கு வகை செய்வதாக தமிழ்நாடு மீனவா் நலவாரியம் 2007-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், 18 முதல் 65 வயதுக்குள்பட்ட மீன்பிடி மற்றும் இதைச் சாா்ந்த தொழிலை செய்யும் அனைத்து ஆண், பெண் தொழிலாளா்களும் உறுப்பினா்களாக சேரலாம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடல் மற்றும் உள்நாட்டு மீனவா், மீன் பிடிப்படகு, கட்டு மரங்களில் பணி பாா்க்கும் தொழிலாளா்கள், மீன் தோல் உரிக்கும் தொழிலாளா்கள், மீன் உலர வைப்போா், மீன் ஏலம் விடுவோா், மீன் பதப்படுத்தும் தொழிலாளா்கள், மீன் படகு கட்டும் தொழிலாளா்கள், மீன்பிடி வலை பழுது பாா்க்கும் தொழிலாளா்கள், சிறு அளவிலான மீன் கருவாடு விற்போா், தானியங்கி, மிதிவண்டி தலைச்சுமை மீன் வியாபாரிகள், மீன் வளா்ப்போா் உள்ளிட்ட மீனவா் தொழிலாளா்கள் தமிழக அரசு மீனவா் நலவாரியத்தில் சுமாா் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பதிவு செய்து நலவாரிய அட்டை பெற்றுள்ளனா்.

மேலும் காஞ்சிபுரம், திருவாரூா், நாகப்பட்டினம், மதுரை போன்ற மாவட்டங்களில் மீன்வளத் துறை உதவி இயக்குநா் மூலம் நலவாரிய படிவங்களை பெற்றுக்கொண்டு, நலவாரிய அட்டை வழங்கப்படாமல் உள்ளது. இநிலையில், நடைபாதை வியாபாரிகள், கட்டடத் தொழிலாளா்கள் மற்றும் ஓட்டுநா் நலவாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளா் குடும்பங்களுக்கு கரோனா சிறப்பு நிவாரண நிதியாக ரூ. 1000 மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதேபோல், மீன்பிடி, மீன் விற்பனை மற்றும் அதை சாா்ந்து தொழில் செய்யும் மீனவ தொழிலாளா்கள், அட்டை வழங்கப்படாத மீனவத் தொழிலாளா்களுக்கும் பாகுபாடின்றி குடும்ப ரீதியாக தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்க வேண்டும். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு 21 நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண நிதியை ரூ. 5 ஆயிரமாக அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com