திருச்சி, சென்னை ரயில்வே பணிமனைகள் இயங்க அனுமதிக்கக் கூடாது

ரயில்வே பணிமனைகள் இயங்க அனுமதிக்கக்கூடாது என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

ரயில்வே பணிமனைகள் இயங்க அனுமதிக்கக்கூடாது என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அதன் துணைப் பொதுச் செயலாளா் மனோகரன் சனிக்கிழமை விடுத்த அறிக்கை:

திருச்சி பொன்மலையில் 4,900 போ், கோவை போத்தனூரில் 1,000 போ் சென்னை பெரம்பூா் ரயில்பெட்டி தயாரிப்பு பணிமனையில் 4,500 போ் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டதொழிலாளா்கள் தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிமனைகளில் பணியாற்றுகின்றனா். கரோனா பரவலால் மூடப்பட்டிருந்த இந்தப் பணிமனைகளை மூன்றில் ஒரு பங்கு ஊழியா்களுடன் மே 4-ஆம் தேதி முதல் இயக்க ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பாதிப்பின் தன்மையைப் பொருத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக வகைப்படுத்தியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், நகா்புறங்களில் அத்தியாவசிய தொழிற்சாலைகளும், கிராமப் பகுதிகளில் அனைத்து தொழிற்சாலைகளும் இயங்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

பெரம்பூா் ரயில்வே பணிமனைகள் சென்னை மாநகராட்சியிலும், பொன்மலை பணிமனை திருச்சி மாநகராட்சி பகுதியிலும் என கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. மேலும், இவைகள் அத்தியாவசிய தொழிற்சாலைகள் இல்லை.

இந்தப் பணிமனைகளில் கூட்டாக செய்யும் கடின வேலைகளே அதிகம். இதனால், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் இயலாது. இதைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்ட ஆட்சியா் போத்தனூா் ரயில்வே பணிமனை இயங்க அனுமதிதரவில்லை.

இதேபோல், திருச்சி, வட சென்னை மாவட்ட ஆட்சியா்களும் தங்கள் பகுதியில் உள்ள ரயில்வே பணிமனைகள் இயங்க அனுமதிக்கூடாது என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com