தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள்

திருவாரூா் அருகே உள்ள மாங்குடியில் தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் சனிக்கிழமை வழங்கினாா்.
தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள்

திருவாரூா் அருகே உள்ள மாங்குடியில் தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் சனிக்கிழமை வழங்கினாா்.

மாங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கும், ஓய்வூதியம் பெறுவோருக்கும் கபசுரக் குடிநீா், அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளருமான பி.எஸ். மாசிலாமணி தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் எம். நாகராஜன், மாங்குடி கிளைச் செயலாளரும், ஊராட்சிமன்றத் துணைத் தலைவருமான என். ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களான அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருள்கள் மற்றும் முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து, மாங்குடி ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. அத்துடன், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுரை கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com