திருத்துறைப்பூண்டி பகுதியில் கோடை மழை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் கருமை நிறம் சூழ்ந்து காணப்பட்டது.
திருத்துறைப்பூண்டி பகுதியில் கோடை மழை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் கருமை நிறம் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாத குறுவை சாகுபடி நிகழாண்டில் ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டுகுறுவை, தாளடி, எனஇரண்டு பொகம் சாகுபடி செய்யலாம் என கடைமடை பகுதி விவசாயிகள் பெரும் பெரும் நம்பிக்கையில் உள்ளனர்.

இந்த மழை கோடை உழவுசெய்ய சிறந்தது என்றும் இன்னும் சற்று அதிகமான மழை பெய்தால் இந்த வாரத்தில் உழவு செய்ய ஏதுவாக இருக்கும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தென்னை விவசாயிகள் தென்னை மரங்களுக்கு இந்த மரம் மழை பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com