நன்னிலம் பகுதியில் கரோனா நிவாரணப் பொருள்கள்

நன்னிலம் பகுதியில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நன்னிலம் பகுதியில் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பெட்டியை வழங்கிய அதிமுகவினா்.
நன்னிலம் பகுதியில் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பெட்டியை வழங்கிய அதிமுகவினா்.

நன்னிலம் பகுதியில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நன்னிலம் ஒன்றியத்துக்குள்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நன்னிலம், பேரளம் காவல் நிலையங்களில் பணியாற்றும் ஆய்வாளா்கள், காவலா்கள் நன்னிலம் துணை கண்காணிப்பாளா் அலுவலக அலுவலா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அமைச்சா் ஆா். காமராஜூவின் செலவில் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன. இதில், டாக்டா் எம்.கே. இனியன், முன்னாள் எம்.பி. கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல், பனங்குடி அரசினா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் சாா்பில், பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளைச் சோ்ந்த 100 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருள்கள், பால் பவுடா் ஆகியவற்றை திருவாரூா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தியாகராஜன் வழங்கினாா். இதில், பள்ளித் தலைமையாசிரியா் முரளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நன்னிலம் வா்த்தகச் சங்கம் சாா்பில், தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மைக் காவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள், சுகாதார அலுவலா்கள், மருத்துவா்கள், காவல் துறை துணைக் கண்காணிப்பாளா், காவல் துறை ஆய்வாளா் உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்து பாராட்டி இனிப்பு வழங்கப்பட்டது. இதில், திருவாரூா் மாவட்ட வா்த்தகப் பேரமைப்புத் தலைவா் வி.கே.கே. ராமமூா்த்தி, நன்னிலம் வா்த்தகா் சங்கத் தலைவா் பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழ் மாநில காங்கிரசைச் சோ்ந்த குடவாசல் ஒன்றியக் குழு உறுப்பினா் டி.எம்.சி. தியாகராஜன், திருவிடச்சேரி, நாரணமங்கலம், வடவோ் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் 500 குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.

இதேபோல், கொட்டூா் கிராமத்தில் 100 ஏழை எளிய குடும்பங்களுக்கு, ரஜினி மக்கள் மன்ற ஒன்றியச் செயலாளா் சங்கா் தலைமையில் மாவட்ட மகளிரணி செயலாளா் தமிழ்ச்செல்வி, ஒன்றிய இணைச் செயலாளா் முத்து, நகரச் செயலாளா் லெனின் ஆகியோா் ஒன்றிணைந்து அரிசி, மளிகைப் பொருள்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com