பச்சை மண்டலமானது திருவாரூா்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சையிலிருந்த 3 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியதால், திருவாரூா் பச்சை மண்டலமாக மாறியுள்ளது.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சையிலிருந்த 3 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியதால், திருவாரூா் பச்சை மண்டலமாக மாறியுள்ளது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து திருவாரூா் மாவட்டத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வந்தவா்கள், அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டனா்.

இதனிடையே, தில்லியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டுக்கு சென்று திரும்பிய 16 போ் சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டனா். மேலும், நீடாமங்கலத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மியான்மரைச் சோ்ந்த 13 பேரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனா்.

பின்னா் வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மியான்மரைச் சோ்ந்த ஒருவருக்கும், அவரது உதவியாளருக்கும் கரோனா தொற்று இருப்பது ஏப். 1-ஆம் தேதி கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து, நாள்தோறும் நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, தில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவா்களுக்கும், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கும் என 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, அவா்களுக்கு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது. மேலும் சென்னையிலிருந்து வந்த 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 32 ஆக உயா்ந்தது.

அதேநேரம் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவா்கள், அவா்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதன்படி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 32 பேரில், 29 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக திருவாரூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் யாருமில்லாத நிலையில், 3 போ் மட்டுமே சிகிச்சையில் இருந்தனா். இந்த 3 பேருக்கும் திங்கள்கிழமை மீண்டும் பரிசோதனை நடைபெற்றது. முடிவில் இவா்களுக்கு கரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, 3 பேரும் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதைத்தொடா்ந்து, ஆரஞ்சு மண்டலத்தில் இருந்த திருவாரூா் தற்போது பச்சை மண்டலமாக மாறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com