திருக்குர்ஆன் இறங்கிய இஸ்லாமியர்களின் மகத்துவம் மிக்க இரவு

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில், ரமலான் மாதத்தில், திருக்குர்ஆன் இறங்கிய மகத்துவம் மிக்க இரவாக, புதன்கிழமை இரவு திருக்குர்ஆன் ஓதி நிறைவு செய்தனர்.
திருக்குர்ஆன் இறங்கிய இஸ்லாமியர்களின் மகத்துவம் மிக்க இரவு

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில், ரமலான் மாதத்தில், திருக்குர்ஆன் இறங்கிய மகத்துவம் மிக்க இரவாக, புதன்கிழமை இரவு திருக்குர்ஆன் ஓதி நிறைவு செய்தனர்.

இதுகுறித்து, கூத்தாநல்லூர் எம்.எஃப்.பீ. இஸ்லாமியக் கல்லூரி முதல்வரும், நியாஜ் பள்ளி வாயில் இமாம் தானாதி ஆலிம் மு.ஜாகிர் ஹுசைன் கூறியது:

"நபிகள் நாயகத்திற்கு இறைவனிடத்தில் இருந்து, 23 ஆண்டுகள் காலங்கடந்த பிறகு, கொஞ்சம், கொஞ்சமாக திருக்குர்ஆன் வந்து இறங்கியது. திருக்குர்ஆன் ரமலான் மாதத்தில் இறங்கிய தினமான, புதன்கிழமை இரவுதான் மகத்துவம் மிக்க இரவு என அழைக்கப்படுகிறது.

இஸ்லாமியர்கள் பகல் முழுவதும் நோன்பு இருந்து, பள்ளி வாயில்களில் இரவுக் காலங்களில், இரவுத் தொழுகையை நடத்துவார்கள். அப்போது, திருக்குர்ஆனின் திருவசனங்களை ஓதி முடிப்பார்கள். குர்ஆனை ஓதி இன்று தான் நிறைவு செய்யப்படும். கரோனா தொற்று ஊரடங்கால் ரமலான் காலமான இந்த நேரத்தில் பள்ளி வாயில்களில் தொழுகை நடத்த முடியவில்லை. எனவே, அனைவரும் தங்களது வீட்டில்தான் குர்ஆனை ஓதி நிறைவு செய்தனர்.

திருக்குர்ஆனில் 114 அத்தியாயங்களும், 6,666 திருவசனங்களும் உள்ளன. திருக்குர்ஆனில் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. முதல் அத்தியாயம் அல்பக்கரா. அல்பக்கரா என்றால், மாடு என்று அர்த்தம். திருக்குர்ஆனின் கடைசி அத்தியாயம். அன்னாஸ். அன்னாஸ் என்றால், மனிதன் எனச் சொல்லப்படும். மாட்டின் குணம் உடைய இவர்கள், திருக்குர்ஆனை முழுமையாகப் படிக்கும்போது, மனித குணம் வந்து விடும் என்பதைத்தான் திருக்குர்ஆன் நினைவுபடுத்துகிறது. அது மட்டுமல்ல, குர்ஆனில் பெண்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது. தேனீ குறித்து சொல்லப்பட்டுள்ளது. மருத்துவம் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. திருக்குர்ஆனில் எல்லா வகையான சிறப்பு அம்சங்களும் உள்ளன. குர்ஆனில் சொல்லப்படுவது எல்லாம் முஸ்லிம்களுக்கு குர்ஆனை விளக்க வேண்டும். அதைச் சிந்தித்துப் பார்க்கும்போது, மனிதனின் அறிவில்தான் குறைவு உள்ளது தெரிய வருகிறது. 

இப்படிப்பட்ட மகத்தான திருக்குர்ஆனை ஓதி, குர்ஆனை ஞாபகப்படுத்தி, நிறைவு செய்யப்படுகிறது. நபிகள் நாயகம் மெக்காவில் உள்ள ஹுரா என்ற மலைக்குகையில் தவம் இருந்துள்ளார். அப்போது, தேவதூதன் அடிக்கடி நபிகள் நாயகத்தைச் சந்தித்து, இறைவனின் வசனங்களைச் சொல்லுவார். அப்படிச் சொல்லும்போது, முதலில் நபியே, நீ ஓடுவீராக, ஓடுவீராக எனச் சொல்லியுள்ளார். நான் ஓட வந்தவர் இல்லை என எழுதப், படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் சொல்லியுள்ளார். தேவதூதன் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து, ஓதுவீராக, ஓதுவீராக எனச் சொல்லியுள்ளார். அதன் பிறகுதான், நபிகள் நாயகம் ஓதவே தொடங்கியுள்ளார். அதற்கு முன்பு நபிகள் நாயகத்திற்கு அரபி படிக்கவோ, எழுதவோ தெரியாது. முதலில் வந்த வசனம் இக்ரா என்ற வசனம். மனித இனத்திற்குக் கல்வி அறிவைத்தான் அவர் போதித்தார். 

எல்லோரும் படித்தவர்களாக இருக்க வேண்டும் என மனித சமூகத்தை ஞாபகப்படுத்தியுள்ளார். எல்லோரும் எழுதப், படிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அதனால்தான் நபிகள் நாயகத்தைப் பார்த்து ஓதுவீராக, எழுதுவீராக, படிப்பீராக என இறைவன் மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளார். இதேபோல், 17-வது பிறை அன்று, அல்பத்ரு (பத்ரு ஸஹாபாக்கள் ) தினத்தில் நடந்த, இஸ்லாத்தின் முதல் போர் பத்ரு போர் ஆகும்.

பத்ரு போர் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் பிறை 17 ல் நடைபெற்றுள்ளது. இந்தப் போரில் 313 ஸஹாபாக்கள் பங்கேற்றனர். அதில் 14 ஸஹாபாக்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தப் போரில் பங்கேற்ற 313 பத்ரு ஸஹாபாக்கள்தான் இஸ்லாத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமானவர்கள். அவர்களின் தனித்துவம் மிக்க சிறப்பு, அவர்களின் பெயர்களைக் கூறி து.ஆ.செய்தால் அந்த து.ஆ. எந்த தங்கு தடையும் இல்லாமல் அல்லாஹ்விடத்தில் போய்ச் சேரும்" என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com