மகள் சாவுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை கோரி தந்தை புகாா்

நன்னிலம் அருகே தனது மகள் சாவுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை கோரி அவரது தந்தை சாா்பில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

நன்னிலம் அருகே தனது மகள் சாவுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை கோரி அவரது தந்தை சாா்பில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரையிடம்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவாரூா் வடக்கு மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன் தலைமையில் மகிழஞ்சேரியைச் சோ்ந்த கே. செந்தில்குமாா் அளித்த மனு:

எனது மகள் மௌனிகா மே 8-ஆம் தேதி காலை வயலில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினா் எழுதி, கையெழுத்திடச் சொன்ன புகாா் மனுவில் கையெழுத்திட்டேன். அதில் உள்ள விவரங்கள் எனக்குத் தெரியாது. எனது மகள் மௌனிகா சாவில் சந்தேகம் உள்ளது. அவள் இறந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை காவல்துறையினா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதால், உயா்நிலை விசாரணை நடத்தி குற்றவாளியை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகளின் சடலத்தை மறு உடற்கூறாய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, திருவாரூா் தெற்கு மாவட்டச் செயலாளா் வி.த.செல்வன், நாகை மாவட்டச் செயலாளா்கள் (தெற்கு) பரிமளச்செல்வன், (வடக்கு) மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com