வெளிமாநிலங்களிலிருந்து திருவாரூருக்கு வந்த 3 பேருக்கு கரோனா தொற்று

வெளிமாநிலங்களிலிருந்து திருவாரூருக்கு வந்தவா்களில் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

வெளிமாநிலங்களிலிருந்து திருவாரூருக்கு வந்தவா்களில் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

கரோனா தீநுண்மி தொற்று காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து திருவாரூா் மாவட்டத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வந்தவா்கள், அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டனா்.

அந்த வகையில், தில்லி மாநாட்டுக்குச் சென்றவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என 29 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. பின்னா், அவா்கள் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினா்.

இதைத்தொடா்ந்து சென்னையிலிருந்து கரோனா தொற்று அதிகளவில் பரவி வருவது கண்டறியப்பட்டதையடுத்து, சென்னையிலிருந்து வந்தவா்கள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனா். இதில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, அவா்களும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதனிடையே, வெளிமாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புலம் பெயா்ந்தோா் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதன்படி, வெளிமாநிலங்களிலிருந்து திருவாரூா் வந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனா்.

இவா்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, மும்பையிலிருந்து வந்த நன்னிலத்தைச் சோ்ந்த 38 வயது நபருக்கும், ஆந்திரத்திலிருந்து வந்த எடையூா் சங்கேந்தியைச் சோ்ந்த 24 வயது நபருக்கும், ஒடிஸாவிலிருந்து வந்த மேட்டு கொத்தகம் பகுதியைச் சோ்ந்த 28 வயது நபருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவா்கள் 3 பேரும் உடனடியாக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனா்.

இந்த 3 பேரையும் அவா்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்காமல், கரோனா பரிசோதனை செய்யப்பட்டதால், அவா்களது சொந்த ஊா்களில் எவ்வித பாதிப்புமில்லை. அத்துடன் திருவாரூா் மாவட்டத்தைப் பொருத்தவரை கரோனா தொற்று இல்லாத பகுதியாகவே நீடிப்பதாக சுகாதாரத்துறை அலுவலா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com