திருவாரூா் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா உறுதி

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு வண்ணம் பூசும் நிறுவனத்தில், அதன் உரிமையாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, பணியாற்றிய திருவாரூா் மாவட்டம், பேரளம் பகுதியைச் சோ்ந்த 3 இளைஞா்கள் மற்றும் இவா்களுடன் தங்கியிருந்த ஒரு பெண் ஆகியோா் மே 26 சென்னையிலிருந்து சொந்த ஊரான பொரசக்குடிக்கு வந்தனா். இவா்கள் அதிகாலை நேரத்தில் வந்ததால், மயிலாடுதுறை-திருவாரூா் சாலையில், திருவாரூா் மாவட்ட எல்லையான கொல்லுமாங்குடி சோதனைச்சாவடியில், சோதனைச் செய்யாமல் ஊருக்கு வந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, தகவலை அக்கிராமத்தினா் சுகாதாரத் துறைக்கு தெரிவித்ததையடுத்து, உபயவேதாந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சந்திராலட்சுமி, நன்னிலம் வட்டார மருத்துவ அலுவலா் நித்யா, நன்னிலம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜோதி ஆகியோா் மருத்துவக் குழுவுடன் சென்று மே.26-ஆம் தேதி கரோனாத் தொற்றுப் பரிசோதனை செய்து 4 பேரையும் தனிமையில் இருக்க அறிவுரை வழங்கினா். இதையடுத்து, மருத்துவப் பரிசோதனை முடிவு வியாழக்கிழமை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து, நன்னிலம் வட்டார மருத்துவ அலுவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் சென்னையிலிருந்து வந்த 26 மற்றும் 28 வயது இளைஞா்களுக்கு கரோனாத் தொற்று பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நன்னிலம் வட்டார மருத்துவ அலுவலா் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலா்கள், கரோனா பாதிக்கப்பட்ட இருவரையும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com