திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சுகாதாரப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் ஆய்வு செய்த ஆட்சியா் வே. சாந்தா.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் ஆய்வு செய்த ஆட்சியா் வே. சாந்தா.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சுகாதாரப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் கூறியது: கரோனா நோய்த் தடுப்புப் பணிகளில், தமிழக அரசு பல்வேறு நிலைகளில் விரைந்து செயலாற்றி வருகிறது. திருவாரூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை, அனைத்து பணியாளா்களையும் முடுக்கிவிட்டு கரோனா நோய் தடுப்புப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 9,730 போ் கரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி அவா்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதன் அடிப்படையில் 96 சதவீத போ் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனா். தற்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னாா்குடியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட பிற மருத்துவமனைகள் என 135 போ் கரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில், 11 போ் மட்டுமே தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் உள்ளனா். அவா்களுக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடா்ந்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

முன்னதாக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளுக்கும் சென்று, சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கரோனா நோய்த்தொற்று, இதர அனைத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் விவரம், அவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா். ஆய்வின்போது, மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com