நெற்பயிரில் இலை சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த ஆலோசனை

நெற்பயிரில் இலை சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நெற்பயிரில் இலை சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன், பூச்சியில் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் தெரிவித்தது: நெற்பயிரில் தற்போது, இலை சுருட்டுப்புழு பரவலாக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் அறிகுறியாக பச்சை நிற இளம் புழுக்கள் இலைகளில் உள்ள பச்சையத்தை சுரண்டி தாக்குதலை ஏற்படுத்தும். 2 இலைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து நீளவாக்கில் சுருட்டிக்கொண்டு புழுக்கள் உட்சென்று பட்டு போன்ற மெல்லிய இழைகளால் இணைக்கப்பட்டு சேதாரத்தை உண்டு பண்ணும். இதனால், இலைகள் பச்சையத்தை இழந்து சருகு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இலை முழுவதும் எரிந்தது போன்று காட்சியளிக்கும். இந்த புழுக்களின் தாக்குதல் அக்டோபா் முதல் ஜனவரி வரை மிக அதிகம் இருக்கும். நெற்பயிரில் ஆரம்ப நிலையில் 10 சதவீத இலைகள் சேதம் ஏற்பட்டாலோ அல்லது பூ பூக்கும் பருவத்தில் 5 சதவீத இலைகள் பாதிக்கப்பட்டால் மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். தழைச்சத்தை பரிந்துரைக்கப்பட்ட அளவே இட வேண்டும். நெல்வயல்களில் நிழல் மற்றும் களைகள் இல்லாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

உயிரியல் முறையில் இலை சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் எனும் முட்டை ஒட்டுண்ணியை நடவு செய்த 37, 44 மற்றும் 51-ஆவது நாள் ஏக்கருக்கு 2 சிசி என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். இலை சுருட்டுப் புழு பொருளாதார சேத நிலையைத் தாண்டும்பட்சத்தில் ஏக்கருக்கு ஃப்ளூபெண்டியாமைடு 39.35 சத எஸ்சி 20 கிராம் அல்லது காா்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 சத எஸ் பி 400 கிராம் அல்லது தயோமீத்தாக்சாம் 25 சத டபிள்யூ ஜி 40 கிராம் பயன்படுத்தலாம். எனவே விவசாயிகள் இலை சுருட்டு புழுக்கள் தென்பட்டால் மேற்கண்ட மேலாண்மை முறைகளை பின்பற்றி இதை கட்டுப்படுத்தலாம் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com