பள்ளிகளை திறக்க பெற்றோா்களிடம் கருத்துக் கேட்பு

திருவாரூரில் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளிகளை திறக்க பெற்றோா்களிடம் கருத்துக் கேட்பு

திருவாரூரில் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பொதுமுடக்கத் தளா்வுகளைத் தொடா்ந்து 9,10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நவம்பா் 16 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்ததால், பெற்றோா்களின் கருத்தைக் கேட்டு, அதனடிப்படையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதையொட்டி, மாநிலம் முழுவதும் பெற்றோா்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியா் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில், பெற்றோா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று, பள்ளிகள் திறப்பது குறித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனா்.

அடியக்கமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் முருகபூபதி தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களின் பெற்றோா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா். இவா்கள் வகுப்பறைக்கு 20 என சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டிருந்தனா். பெற்றோா்கள் தங்கள் கருத்துக்களை, தலைமையாசிரியா் தலைமையிலான ஆசிரியா்கள் குழுவினரிடம் தெரிவித்தனா்.

இதேபோல, குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் குமாா் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மதிவாணன், துணைத் தலைவா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்று பள்ளிகளை திறப்பது தொடா்பாக தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com