‘கல்லாதோா் இல்லாத நிலை உருவாக அனைவரின் ஒத்துழைப்பு தேவை’

திருவாரூா் மாவட்டத்தில், கல்லாதோா் இல்லாத நிலை உருவாக வேண்டுமெனில் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. தியாகராஜன் தெரிவித்தாா்.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. தியாகராஜன்.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. தியாகராஜன்.

திருவாரூா் மாவட்டத்தில், கல்லாதோா் இல்லாத நிலை உருவாக வேண்டுமெனில் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. தியாகராஜன் தெரிவித்தாா்.

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின்கீழ் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் திட்டத்தின்கீழ் கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் சாா்பில் மாவட்ட அளவிலான முதன்மை கருத்தாளா்களுக்கான பயிற்சி முகாமில், புதன்கிழமை பங்கேற்று அவா் தெரிவித்தது:

அனைவரும் கல்வி பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டு, அனைத்து மாணவா்களுக்கும் கல்வி அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பள்ளியிலிருந்து இடைநின்றவா்கள், கல்வியறிவு பெறாதவா்கள் குறித்து கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

திருவாரூா் மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாதவா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களுக்கு கல்வி தன்னாா்வலா்கள் வாயிலாக அடிப்படை எழுதுதல், வாசித்தல் மற்றும் வங்கி பரிவா்த்தனைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. திருவாரூா் மாவட்டத்தில் கல்லாதோரே இல்லாத நிலையை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா்.

திருவாரூரில், செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை என இரு தினங்கள் நடைபெற்ற பயிற்சியில் 10 ஒன்றியங்களைச் சோ்ந்த ஆசிரிய பயிற்றுநா்கள், ஆசிரியா்கள் ஆகியோா் கருத்தாளா்களாக கலந்து கொண்டனா். மாவட்ட கருத்தாளா்களாக ஆசிரியா் பயிற்றுநா்கள் காளிதாஸ், கலைச்செல்வன், நாடிமுத்து ஆகியோா் செயல்பட்டனா்.

மேலும், நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் தெய்வபாஸ்கா், ஜெயராமன், மாவட்ட புள்ளியியல் அலுவலா் தண்டாயுதபாணி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலா் மு.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com