வீடுகளில் கருப்புக் கொடியேற்றும் போராட்டம் ஒத்திவைப்பு

பயிா்க் காப்பீடு விவகாரத்தில் சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டதால், தீபாவளியன்று வீடுகளில் கருப்புக் கொடியேற்றும் போராட்டத்தை 13 கிராம விவசாயிகள் ஒத்திவைத்துள்ளனா்.

பயிா்க் காப்பீடு விவகாரத்தில் சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டதால், தீபாவளியன்று வீடுகளில் கருப்புக் கொடியேற்றும் போராட்டத்தை 13 கிராம விவசாயிகள் ஒத்திவைத்துள்ளனா்.

வலங்கைமான் வட்டத்துக்குள்பட்ட 13 கிராம விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, தீபாவளியன்று தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனா். இந்நிலையில், வலங்கைமான் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் (பொறுப்பு) தேவகி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில், இந்த விவகாரத்தில் ஆட்சியரை சந்தித்து முறையிட போவதாகத் தெரிவித்த விவசாயிகள், கருப்புக் கொடியேற்றும் போராட்டத்தை ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தனா்.

கூட்டத்தில் தி.முக. ஒன்றிய செயலாளா் அன்பரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா், காவல் ஆய்வாளா் சுஜித்ஆனந்த், வேளாண்மை உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியம் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com