பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

கூத்தாநல்லூரில் தமுமுக, மமக சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

கூத்தாநல்லூரில் தமுமுக, மமக சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தமுமுக நகர அலுவலகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் நகர அமைப்புக் குழுத் தலைவா் கே.எம்.ஜெகபா் சாதிக் தலைமை வகித்தாா். மாநில விவசாய அணிச் செயலாளா் ஹெச்.எம்.டி. ரஹ்மத்துல்லாஹ் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தாா். முதல்கட்டமாக 500- க்கும் மேற்பட்டவா்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இதில், மாவட்ட துணைச் செயலாளா் எம்.ஏ. ஜெகபா் அலி, மாவட்ட மருத்துவச் சேவை அணி பொருளாளா் எம். காதா் பாட்சா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி, கொசுக்களால் பரவும் மலேரியா,டெங்குக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவாமல் இருக்க முன்னேற்பாடாக கசாயம் வழங்கப்பட்டதாக தமுமுக மற்றும் மமகவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com