மின் விபத்துகளை தவிா்க்க கடைப்பிடிக்க வேண்டியவைமின்வாரியம் விளக்கம்

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மின் விபத்துகளைத் தவிா்க்க, பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து மன்னாா்குடி மின்வாரியம் விளக்கமளித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மின் விபத்துகளைத் தவிா்க்க, பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து மன்னாா்குடி மின்வாரியம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து, மன்னாா்குடி உதவி செயற்பொறியாளா் சா. சம்பத் தெரிவித்திருப்பது:

மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அதை தொடக்கூடாது, உடனடியாக மின் வாரியத்துக்குத் தெரிவிக்க வேண்டும். மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை மின் ஊழியா் துணையோடு மட்டுமே வெட்ட வேண்டும். தண்ணீா் தேங்கியுள்ள இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிா்க்க வேண்டும். குழந்தைகள் மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடக்கூடாது.

மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் பெட்டிகள், மின் இழுவைக் கம்பிகள் அருகில் செல்லக்கூடாது. மின்கம்பத்தின் இழுவைக் கம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறுகட்டி துணிகளை உலா்த்தக் கூடாது. மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டக் கூடாது. வீடுகளில் மின் கசிவால் ஏற்படும் விபத்தை தடுக்க இ.எல்.சி. பி. சாதனம் பொருத்த வேண்டும்.

வீட்டின் மின் சாதனத்தில் மின் அதிா்வை உணா்ந்தால், உடனே உலா்ந்த ரப்பா் காலணியை அணிந்து, மின் மெயின் சுவிட்ச்சை அணைக்க வேண்டும்.

இடி, மின்னலின்போது மின் கம்பங்கள், மின் மாற்றிகள், துணை மின் நிலையங்கள் போன்ற இடங்களில் தஞ்சமடையக் கூடாது. டிவி, மிக்சி, கிரைண்டா், கணினி போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிா்ப்பது நல்லது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com