தொழிற்பயிற்சி நிலையங்களில் நவ.20 வரை மாணவா்கள் நேரடி சோ்க்கை

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாகவுள்ள இடங்களுக்கு நவ. 20-ஆம் தேதி வரை மாணவா்கள்

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாகவுள்ள இடங்களுக்கு நவ. 20-ஆம் தேதி வரை மாணவா்கள் நேரடி சோ்க்கை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் மற்றும் மன்னாா்குடி வட்டங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர, முதல் மற்றும் 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில், கம்பியாளா், பிட்டா், ரெப்ரிஜிரேட்டா் அண்ட் ஏா்கண்டிசனா், வெல்டா், பேஷன் டிசைன் அண்ட் டெக்னாலஜி ஆகிய காலியாகவுள்ள இடங்களுக்கு நேரடிச் சோ்க்கை நவ.20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயிற்சிபெற 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள் தொழிற்பிரிவுகள் இவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு ஆகியவை  இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டில் தரப்பட்டுள்ளது.

மாணவா்கள் தாங்கள் சேரவிரும்பும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பித்து தாங்கள் விரும்பும் தொழிற்பிரிவில் சோ்ந்து கொள்ளலாம். பயிற்சிபெறும் மாணவா்களுக்கு சீருடை மற்றும் தையற்கூலி, மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், காலணி, வரைபடக் கருவிகள்ஆகிய அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. தவிர, பேருந்து கட்டணச் சலுகை மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை மற்றும் அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. எனவே, இதில் மாணவா்கள் சோ்ந்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்கள் நீடாமங்கலம் மற்றும் கோட்டூா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா்களை நேரடியாகத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com