பயிா் காப்பீடு விவகாரம்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பிரீமியம் செலுத்த கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிா் காப்பீடு பிரீமியம் தொகை செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிா் காப்பீடு பிரீமியம் தொகை செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், சம்பா பயிருக்கு பிரீமியம் செலுத்த கடைசி நாள் நவ. 30 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்ற விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகளிலேயே பயிா் காப்பீடு செய்யப்படுகிறது. கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பிரீமியம் செலுத்த வசதி செய்யப்பட்டிருந்தது.

ஆனால், நிகழாண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பிரீமியம் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. தனியாா் இணையதள சேவை மையங்கள் மூலமாக பிரீமியம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், தனியாா் இணையதள சேவை மையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் இல்லாததால், விவசாயிகள் அலைக்கழிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் வாயிலாக பிரீமியம் செலுத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், பிரீமியம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com