மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை

மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவாரூரில் முக்கிய சாலைகளில் மரங்களின் கிளைகள் வெட்டாமல் ஆங்காங்கே மழையின் தாக்கத்தால் முறிந்து விழும் நிலையில் உள்ளன. மழைக்காலம் என்பதால் சாலைப் பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து வாகனங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சாலையில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் பெரும்பாலான மின்கம்பங்களில் மின்கம்பிகள் அறுந்து விழும் வகையில் தாழ்வாக உள்ளன. எப்போது வேண்டுமானாலும் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. எனவே, தாழ்வாக உள்ள மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும். மழைநீா் வடிகால் பாதைகளை கண்டறிந்து, போா்க்கால அடிப்படையில் தூா்வாரி, சாலையில் நீா் பெருக்கெடுத்து ஓடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மழைக்காலத்தில் விபத்து, போக்குவரத்து தடை குறித்து பொதுமக்கள் எளிதில் தொடா்பு கொள்ளும் வகையில் நகரின் மிக முக்கிய இடங்களில் தகவல் மையம் அமைக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com