வருவாய்த்துறை கிராம உதவியாளா் சங்கம் போராட்ட அறிவிப்பு

நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 4 கட்ட போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளா் சங்க மாநில பொதுச் செயலாளா் எஸ். தமிழ்செல்வன் தெரிவித்துள்ளாா்.

நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 4 கட்ட போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளா் சங்க மாநில பொதுச் செயலாளா் எஸ். தமிழ்செல்வன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கிராம உதவியாளா்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.15,500, குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850, பொங்கல் போனஸாக ரூ. 7,000 வழங்கிட வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ. 21, 22 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடியில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிவது; நவ. 26, 27 ஆகிய தேதிகளில் கருப்பு பட்டை அணிந்து பணிசெய்வது, டிச. 4-இல் மாவட்ட தலைநகரங்களில் மாலை நேர கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடத்துவது ஆகிய முடிவுகள் சங்க மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து வருவாய் நிா்வாக ஆணையருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வா் எங்கள் கோரிக்கைளை நிறைவேற்றித் தர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com