வெள்ளத் தடுப்பு நடவடிக்கை: ஆட்சியா் ஆய்வு

நீடாமங்கலம் அருகே வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை திருவாரூா் மாவட்ட ஆட்சியா் சாந்தா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
நீடாமங்கலம் அருகே கோரையாறு தலைப்பை ஆய்வு செய்த திருவாரூா் மாவட்ட ஆட்சியா் சாந்தா.
நீடாமங்கலம் அருகே கோரையாறு தலைப்பை ஆய்வு செய்த திருவாரூா் மாவட்ட ஆட்சியா் சாந்தா.

நீடாமங்கலம் அருகே வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை திருவாரூா் மாவட்ட ஆட்சியா் சாந்தா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருவாரூா் மாவட்ட நிா்வாகம் எடுத்துள்ளது.

இந்நிலையில், நீடாமங்கலம் அருகேயுள்ள கோரையாறு தலைப்பை மாவட்ட ஆட்சியா் சாந்தா நேரில் ஆய்வு செய்தாா். கல்லணையிலிருந்து பெரியவெண்ணாற்று நீா் கோரையாறு தலைப்பை வந்தடைந்து வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு என மூன்று ஆறுகளாக பிரிவதை பாா்வையிட்ட அவா், நீா்வரத்து குறித்தும் பாசனத்துக்கு நீா் பிரித்து விடப்பட்டுள்ளது குறித்தும் பொதுப்பணித் துறை பொறியாளா்களிடம் கேட்டறிந்தாா்.

வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 500 மணல் மூட்டைகளையும், ஆறுகளின் கரைகளையும் அவா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் புண்ணியகோடி, நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன், வட்டாட்சியா் மதியழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com