பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நாளை தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நவ.21 முதல் டிச.10 வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நவ.21 முதல் டிச.10 வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மூலம் திருவாரூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நவ.21 முதல் டிச.10 வரை பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை (6 முதல் 18 வயது வரை) கண்டறிய கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி தன்னாா்வலா்கள் ஆகியோரை கொண்டு இப்பணி நடத்தப்பட உள்ளது.

இக்கணக்கெடுப்பு மூலம் கண்டறியப்படும் குழந்தைகளை, பள்ளிகளில் செயல்படும் சிறப்பு பயிற்சி மையங்கள், உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்கள் மற்றும் பள்ளி ஆயத்த பயிற்சி மையங்களில் சோ்த்து அவா்களின் கல்வி மேம்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com