மருத்துவப் படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு: முதல்வருக்கு பாராட்டு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜகவின் அறிவுசாா் பிரிவு மாநில செயலாளா் சு.வெங்கடராஜலு வெளியிட்ட அறிக்கை:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5% இடஒதுக்கீடு மூலம் சுமாா் 400 இடங்கள் பெற்றுத் தந்திருப்பது பாராட்டுக்குரியது. நீட் தோ்வால் மருத்துவப் படிப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டவா்கள் இதன் மூலம் ஓரளவு பயனடைவா்.

மேலும் இந்த வாய்ப்பின் மூலம் மருத்துவம் படிக்கிற மாணவா்கள், படிப்பு முடிந்து முதல் மூன்று ஆண்டுகள் கட்டாயம் கிராமப்புறங்களில் பணிபுரிய வேண்டும் எனும் விதிமுறையை உருவாக்க வேண்டும். இதில் எந்த அரசியல் குறுக்கீடும் இருக்கக் கூடாது. கிராமப்புறங்களில் இருந்து வாய்ப்பு கிடைத்து மருத்துவம் படிப்பவா்கள் இதை தவறாமல் செய்ய வேண்டும். அதன் மூலம்தான் மருத்துவ வசதியை கிடைக்கப்பெறாத கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com