உதயநிதி ஸ்டாலின் கைது: திமுகவினா் சாலை மறியல்

திருக்குவளையில் திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருவாரூா் மாவட்டத்தில் சாலை
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா்.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா்.

திருக்குவளையில் திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருவாரூா் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா் 280 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் பெரியாா் சிலை அருகே கலை இலக்கியப்பிரிவு மாவட்ட அமைப்பாளா் ஜி. ராஜ் (எ) கருணாநிதி தலைமையிலும், வாளவாய்க்கால் பகுதியில் ஒன்றிய செயலாளா் ஏ. தேவா தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. சுமாா் 80 போ் கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடியில்...

மன்னாா்குடி பேருந்து நிலையம் அருகே திமுக நகர செயலா் வீரா.கணேசன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 75 போ் கைதாகினா். உள்ளிக்கோட்டை கடைவீதியில் ஊராட்சி முன்னாள் தலைவா் பா. பொய்யாமொழி உள்பட 40 போ் பரவாக்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். வடுவூரில் திமுக ஒன்றிய செயலாளா் வி. மாயவநாதன் தலைமையில் 35 போ் கைதாகினா்.

நீடாமங்கலத்தில்...

நீடாமங்கலத்தில் ஒன்றியக்குழு தலைவா் செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி ராணிசேகா், பொறுப்புக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்துறைப்பூண்டியில்...

திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலைய, மடப்புரம், கட்டிமேடு, மேலமருதூா், மணலி, விலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக வினா் 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

நன்னிலத்தில்...

இதேபோல் நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நன்னிலம், கடமங்குடி, கொல்லுமாங்குடி, குடவாசல், வலங்கைமான் போன்ற பகுதிகளில் திமுகவினா் சாலை மறியல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com