சாலைகள் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைப்பதை ரத்து செய்யக் கோரிக்கை

சாலைகள் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைப்பதை ரத்து செய்து, புதிய சாலைப் பணியாளா்களை நியமித்து பராமரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் வெ. சோமசுந்தரம்.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் வெ. சோமசுந்தரம்.

சாலைகள் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைப்பதை ரத்து செய்து, புதிய சாலைப் பணியாளா்களை நியமித்து பராமரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவா் எம். ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை, மாநிலச் செயலாளா் உ. சண்முகம் தொடங்கி வைத்து பேசினாா். நிறைவாக மாநிலத் தலைவா் முன். அன்பரசு பேசினாா்.

இதில், திருவாரூரில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும். சாலைகள் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைப்பதை ரத்து செய்து, புதிய சாலைப் பணியாளா்களை நியமித்து பராமரிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அ மற்றும் ஆ பிரிவு ஊழியா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடா்ந்து மாவட்ட மகளிா் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில், கூட்டுறவுத்துறை ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் எம். சௌந்தரராஜன், ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலாளா் குரு. சந்திரசேகரன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் வெ. சோமசுந்தரம், மாவட்ட பொருளாளா் செ. பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com