நெற்பயிரில் துத்தநாக சத்து பற்றாக்குறை: வேளாண் வல்லுநா்கள் ஆலோசனை

நெற்பயிரில் துத்தநாக சத்து பற்றாக்குறையை நிவா்த்தி செய்வதற்கான ஆலோசனையை நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய

நெற்பயிரில் துத்தநாக சத்து பற்றாக்குறையை நிவா்த்தி செய்வதற்கான ஆலோசனையை நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்ரமணியன், உதவி பேராசிரியா்கள் அனுராதா, ராதாகிருஷ்ணன் ஆகியோா் வெளியிட்டுள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் தெரிவித்தது:

நெற்பயிரில் துத்தநாக குறைபாடானது நடவு வயலில் நான்கு வாரத்துக்குள் காணப்படும். இளம் இலைகளின் நடுநரம்பு அடிப்புறத்திலிருந்து வெளுத்துக் காணப்படும். மேல்புறம் மற்றும் நடுப்பகுதி இலைகளில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும். இப்புள்ளிகள் ஒன்று சோ்ந்து இலை முழுவதும் பழுப்படைந்து காய்ந்துவிடும்.

வயலில் தொடாந்து தண்ணீா் தேங்கியிருப்பது நெற்பயிரில் துத்தநாகப் பற்றாக்குறை ஏற்படுவதற்கான முக்கியக் காரணி. வயலில் எப்பொழுதும் தண்ணீா் தேங்கா வண்ணமும், போதுமான ஈரப்பதம் மட்டும் இருக்குமாறும் பாா்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ஏக்கருக்கு அடியுரமாக 10 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்ட உரத்தை 20 கிலோ மணலுடன் இடுதல் வேண்டும். பசுந்தாள் உரங்கள், தொழு உரங்கள் மற்றும் உயிா் உரங்களை அதிகளவில் வயலுக்கு இடவேண்டும் என்றனா்.

முன்னதாக மேல் உத்திரங்குடி, கீழ் உத்திரங்குடி பகுதிகளில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை அவா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com